வருத்தத்தில் இருக்கும் நடிகர் அருண் விஜய்! வெளியிட்ட மனதை உருக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். நடிகர் விஜயகுமார் முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கவிதா, அனிதா மற்றும் நடிகர் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். நடிகர் அருண் விஜய் முறை மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பிரியம், காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானார்.

தற்போது தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் நடிகை வனிதாவின் சகோதரர் ஆவார். தினமும் கடற்கரைக்கு தனது செல்லப்பிராணியை அழைத்து செல்லும் வழக்கம் அருண்விஜய்க்கு உண்டு. நடிகர் அருண் விஜய் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் தூக்கி போடுவதால் நீரில் வாழும் ஜீவன்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதை கூறும் வகையில் மனதை உருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அந்த பதிவில், கடற்கரையில் என்ன கரை ஒதுங்கியுள்ளது என பாருங்கள்! மனிதர்களான நம்மால் வீசப்பட்ட அளவிட முடியாத அளவிலான பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் வெளியேற்றப்படுவதைக் காண மிகவும் வருத்தமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.