வருங்கால மனைவியின் பேச்சுலர் பார்ட்டியை பார்த்து திருமணத்தை கேன்சல் செய்த மாப்பிள்ளை!

அமெரிக்காவில் வருங்கால மனைவி தனது நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டியில் மது அருந்தி விட்டு நடந்து கொண்ட விதத்தால் வருங்கால கணவர், நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அமெரிக்காவில் ஒரு ஆணும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. திருமணத்திற்கு முன் மணப்பெண் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி அளித்துள்ளார் அந்த பார்ட்டி ஒரு கட்டத்தில் எல்லை மீறி போக மது போதையில் மணப்பெண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். அப்போது பெண்ணின் நண்பர் ஒருவர்.

அரைகுறை ஆடையுடன் நடனமாடும் ஸ்ட்ரிப்பரை அழைத்து கொண்டு அங்கு வந்துள்ளார். பின்னர் திருமணம் நடக்கவிருந்த பெண் போதையின் உச்சத்தில் இருந்த போது அவருடைய நண்பர்கள், ஸ்ட்ரிப்பர் அழைத்து வந்து அவரது ஆடைகளை ஸ்ட்ரிபிங் செய்துள்ளனர். இதையெல்லாம் அங்கிருந்த Carmelo Delva என்ற நபர்

வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். இந்த நிகழ்வுக்கு பிறகு மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் பேஸ்புக் பதிவில் Carmelo குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை இதுவரை 17 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளார்கள். பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தவர்களை இந்த மிதமிஞ்சிய நாகரீகம் பிரித்து விட்டது என கூறினால் அது மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published.