வனிதா இந்த பெயர் தான் இன்று இணைய உலகத்தின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது, பிறகு வனிதா செம்ம பேமஸ் ஆனார். வனிதா பீட்டர் பால் விவாகரத்து செய்வதற்கு முன் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. பலரும் இருக்குற கொரோனா பிரச்சினையால் இதெல்லாம் தேவையா? என கொந்தளித்து வருகின்றனர்.
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
அவரின் யூட்டிப் பக்கம் மேக்கப் குறிப்புகளையும் அவரின் ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படமும், மேக்கப்புடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த புபைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.