வனிதாவுக்கே சவால் விட்டு வெளுத்து வாங்கிய நாஞ்சில் விஜயன்! சூடுபிடிக்கும் பிரச்சனை..!

வனிதா இந்த பெயர் தான் இணைய உலகத்தின் ஹாட் டாபிக். வனிதா பீட்டர் பால் திருமணத்தை குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அவரது முதல் மனைவியான எலிசபெத் இதுதொடர்பாக புகார் அளித்ததால் அவருக்கு ஆதரவாக நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இதனால் கடுப்பான வனிதா, என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என விளாசினார்.

விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியுடன் தன்னை இணைத்து வைத்து பேசியதால் வனிதா மீது கடுப்பானார். இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பதிவிட்டார். மேலும், தன்னைப் பற்றி ஷேர் செய்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நீக்குவதாக நாஞ்சில் விஜயன் கூறியதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், நடிகை வனிதாவின் டிவிட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நாஞ்சில் விஜயன்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக வனிதா கூறியதால் பிரச்சனை சற்று ஓய்ந்தது என்று நினைத்தால் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!