வனிதா இந்த பெயர் தான் இன்று இணைய உலகத்தின் ஹாட் டாபிக். சமூக வலைதளங்களில் வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் பற்றி தான் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது, பிறகு வனிதா செம்ம பேமஸ் ஆனார். இதனால் பலரும் அதிருப்பதியை வெளிபடுத்தி வருகிறார்கள்.

தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அவரின் யூட்டிப் பக்கம் மேக்கப் குறிப்புகளையும் அவரின் ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில், வனிதாவுக்கு, ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா மற்றும் ஜெய்னிதா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
வனிதாவின் முதல் மகள் ஜோவிகா தற்போதே தன் அம்மாவைப் போல போல்டாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி வைத்துள்ளார். அந்த பக்கத்தில் தான் ஒரு நடிகை என குறிப்பிட்டுள்ளார். இதனால் இவர் ஏற்கனவே ஏதாவது படத்தில் நடித்துள்ளாரா? இல்லது இனி ஏதாவது படத்தில் நடிக்கப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பலரும் ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.