வனிதா திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறினார். ஆனால் ராபர்ட் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யாததால் இவர்களின் திருமணம் நடைபெறாமல் போனது. நாளடைவில் இவர்களுக்குள்ளும் பிரிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், தற்போது வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்பின்னர் ராபர்ட் பேட்டி ஒன்றில் வனிதாவுடன் உறவு குறித்து பேசியுள்ளார்.

அதில், சிவாஜி எம்ஜிஆர் ரஜினி என்ற படத்தை நானும் வனிதாவும் சேர்ந்து தான் தயாரித்தோம். மேலும் என் அப்பாவிற்கு என்னை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என ஆசை. அந்த ஆசை வனிதாவால் நிறைவேறியது. அதனால் தான் அவர் மீதான அன்பில் அவரின் பெயரை பச்சை குத்தி கொண்டேன். பச்சை குத்திய ஒரு மாதத்திற்குள்ளேயே எங்கள் இருவருக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் ஏற்பட தொடங்கின. குத்திய பச்சையில் புண் கூட ஆறாத நிலையில் அதனை நான் அழித்து விட்டேன் என கூறியுள்ளார்.
மேலும், வனிதா என்னை கேட்காமலேயே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறினார். அதன் பின்னர் ஏன் அப்படி சொன்னீர்கள் எனக் கேட்டதற்கு அதை பின்னாடி பார்த்துக் கொள்ளலாம் என கூறி விட்டார். படத்துக்காகத் தான் இவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார் என பேசியுள்ளார்.