வடிவேல் பாலாஜி தன் மனைவி பற்றி சொன்ன அந்த வார்த்தைகள்.. கிரேஸ் கருணாஸ் உருக்கம்..!

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், காமெடி பிரபலமுமான வடிவேலு பாலாஜி உயிரிழந்தார்.  நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு ரசிகர்கள், மற்றும் திரை துறையினரை கடும் அதிர்ச்சியடைய செய்தது. அவருடனான நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பேசிய பாடகியும், நடிகர் கருணாஸ் மனைவியுமான கிரேஸ் கருணாஸ், வடிவேல் பாலாஜி மறைவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

அவருடன் நான் நிறைய பேசியிருக்கிறேன், என்னை அக்கா என்று அவர் அழைப்பார். யாரை பார்த்தும் பொறாமை கொள்ளாத அவர் மற்றவர்களின் திறமையை நன்றாக ஊக்குவிப்பார். என்னிடம் ஒரு முறை வடிவேல் பாலாஜி பேசும் போது, தனது மனைவி மிகவும் அப்பாவி எனவும், அவரை கடைகளுக்கு பொருட்களை வாங்க அனுப்ப மாட்டேன் எனவும் நானே அனைத்தையும் கவனித்து கொள்வேன் என்றும் கூறினார்.

அப்படியான அவரின் மனைவி இந்த இழப்பை எப்படி சமாளிக்க போகிறார் என தெரியவில்லை. நாங்கள் அவர் குடும்பத்துக்கு என்ன தான் உதவி செய்தாலும் வடிவேல் பாலாஜி போல வந்துவிடுமா? அவரின் மனைவி இனி தான் தைரியமாக இருக்க வேண்டும், அதே போல இரண்டு பிள்ளைகளும் நன்றாக படித்து தாயை பார்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.