வடிவேல் பாலாஜி குறித்து நினைவுகள்! சோகத்துடன் அது இது எது நிகழ்ச்சியில் நடந்ததை கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் ஜொலிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா மடத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவரின் நம்பிக்கையும், உழைப்பும் தற்போது அவரை நட்சத்திர நாயகனாக சினிமாவில் இடம் பிடிக்கச்செய்துள்ளது எனலாம். அவர் டிவியில் பணியாற்றிய போது அது இது எது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

அதில் இடையே சிரிக்க வைக்கும் ரவுண்டில் இன்று இறந்த போன காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி வந்துபோனதையும் மறக்க முடியாது. அவரின் மரணத்தால் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இந்நிலையில் அது இது எது நிகழ்ச்சியிலிருந்தே பாலாஜியை எனக்கு தெரியும். எங்களின் எபிசொட்கள் நல்ல கெமிஸ்ட்ரி என சொல்வார்கள். நாங்கள் எப்போது சேர்ந்தாலும் ஜாலி தான். எங்களின் இயக்குனர் நாங்கள் இணையும் போது அவுட் லைனை மட்டும் தான் கூறுவார். நாங்களே ஸ்கிரிப்டை உருவாக்கிவிடுவோம்.

ஒரு நாளில் 4 எபிசொட்கள் படமாக்கப்படும். ஆனாலும் பாலாஜி அதே உற்சாகத்துடன் தான் இருப்பார். நடிகர் வடிவேலு போல நன்றாக பாலாஜிக்கு செய்யத்தெரிந்தாலும் அவரின் வேகத்திலும் உறுதியிலும் சில விசயங்கள் இருக்கின்றன. அவரை எந்த மேடையில் நீங்கள் இறக்கினாலும் தன்னுடைய நகைச்சுவையால் ஒரு கூட்டத்தையே சிரிக்கவைத்துவிடுவார். அவரின் சிரிப்பை எப்போதும் நினைத்துப்பார்ப்பேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.