பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர். அது இது எது, மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் வடிவேலு பாலாஜி(42) . இவர் பந்தயம், யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா, சுட்டபழம் சுடாத பழம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
வடிவேலு அவர்களை போல அதிகம் காமெடி செய்து அசத்தியதால் வடிவேலு பாலாஜி என்றே அழைக்கப்பட்டார். இவரின் நகைச்சுவை திறமைக்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது. இந்த செய்தி வந்ததில் இருந்து சினிமா ரசிகர்கள் அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர். இவரது மரண செய்தி கேட்டறிந்த காமெடி நடிகர் வடிவேலு, என்னுடைய குடும்பத்தில் இருக்கும் 150 பேரும் பாலாஜியின் மரணத்திற்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.