வடிவேலுவின் உண்மைமுகத்தை கிழித்த காமெடி நடிகர் பெஞ்சமின்..! என்னை நடிக்க விடாம துன்புறுத்தினார் என உருக்கம்..!

இயக்குனர் சேரன் இயக்கத்தில், பார்த்திபன், முரளி, வடிவேலு கூட்டணியில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்டபம் “வெற்றிக்கொடிகட்டு” இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் நடிகர் பெஞ்சமின். சமீபத்தில், சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து வந்துள்ள இவர் ஒரு பேட்டியில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கேட்டபோது அவர் பார்த்த வடிவேலுவின் சுயரூபத்தை பற்றி விளக்கியுள்ளார்.

வடிவேலு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் உங்களுடைய காட்சியும் அவருடைய காட்சியும் ஒரே நாளில் எடுக்கப்படவேண்டும் அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என கூறினார் சேரன். வடிவேலு வராததால் 18 நாட்கள் பெஞ்சமினை ஒரு புளிய மரத்தடியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர் சேரன். ஒருவழியாக வடிவேலு படப்பிடிப்புக்கு வந்தவுடன் எங்களுக்கு இடையேயான காட்சி எடுக்கப்பட்டது.

என்னை நடிக்க விடாமல் வடிவேலு தனது முக பாவனையால் கிண்டல் செய்ததார். அதனால், நான் வடிவேலுவை பார்த்து திட்ட வேண்டிய காட்சி கிட்டத்தட்ட 5 ரீல் பெட்டிகளுக்கு மேல் வீணாக்கப்பட்டது. நடிகர் பார்த்திபனின் உதவியுடன் வடிவேலுவை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்திவிட்டு பின் வடிவேலுவை திட்டுவது போல இருந்த காட்சியை படமாக்கினோம். இவ்வாறு தான் ஒரு புதுமுக நடிகர் என்றும் பாராமல் நீ திட்டி விடுவாயா?? திட்டி விட்டு உயிரோடு போய்டுவியா..? என்ற தொணியில் மிரட்டி என்னை பயமுறுத்தி பல டேக்குகள் வாங்க வைத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வீணடித்து விட்டார் என இந்த பேட்டியை பார்த்தபின் அனைவரும் ஆச்சரியப்பட்டும், பெஞ்சமினுக்காக பரிதாபப்பட்டும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.