வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. ஒரு கோடியே 25 லட்சம் கொடுக்கணும்…. வனிதா விடுத்த சவால்

வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் பற்றி தான் இன்னும் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வனிதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சேர்ந்து அண்மையில் பேட்டி அளித்தார்கள். அந்த பேட்டியில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மரியாதை இல்லாமல் டி போட்டு பேசியதுடன், மோசமாக திட்டினார். வனிதா பேசியதை கேட்டு பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பினார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இதையடுத்து வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து லக்ஷ்மி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என்னால் ராமின் பெயர் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டுள்ளது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவருக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் அன்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. என்னையும், என் கணவரையும் திட்டியவருக்கு நன்றி. பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்காக தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது அந்த கோர்ட் நோட்டீஸ் தகவல் அடங்கிய காப்பியை ட்விட்டரில் பதிவிட்ட வனிதா, நல்ல உள்ளம் கொண்ட சமூக போராளி, ஒரு கோடியே 25 லட்சம் கொடுக்க வேண்டும் என தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பான வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தான் தயார் என நடிகை வனிதா சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *