சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் சித்ராவை கூறலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் இவருக்கும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கும் உள்ள காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்தொடரின் வெற்றி பயணத்திற்கு, கதிர் முல்லை இருவரின் கதாபாத்திரமும் மிகவும் முக்கியமான ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடிகை சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தனது வருங்கால கணவருடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ரவுடி பேபி போல் இவர் போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ..