லேடி சூப்பர் நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியும்? இத்தனை கோடிகளா..!

தமிழ் சினிமாவின் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக மற்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சந்திராமுகி, பில்லா, யாரடி நீ மோகினி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. அவரது படங்கள் சினிமாவில் செய்யாத சாதனையே இல்லை. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என அங்கேயும் தனது படங்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் கலக்கிய இவர் பாலிவுட்டிற்கு எப்போது செல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திலும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கேரளாவிற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

அடுத்தபடியாக அவர் எப்போது திருமணம் செய்வார் என்பது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இப்படி சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வரும் இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?. இந்திய மதிப்பு படி ரூ. 71 கோடி என்று கூறப்படுகிறது, இந்த மதிப்பு விவரம் 2019ம் ஆண்டின் சர்வே படி கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பிரபல ஆங்கில வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.