பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், கோவையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை உள்ளிட்டோர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர், பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மிக பிரபலமான அந்த பெண் மருத்துவரை ஒரு போலியான பெண்ணின் முகநூல் பக்கத்தை வைத்து தொடர்புகொண்டுள்ளான் திருநாவுக்கரசு. பின் நாளுக்கு நாள் அந்த மருத்துவரிடம் அந்தரங்க தகவல்களை பற்றி பேச தொடங்கியுள்ளன அந்த மருத்துவரும் பெண் தானே என திருநாவுக்கரசுக்கு பதிலளித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர்களது பேச்சு எல்லைமீறி ஓரினசேர்க்கை பக்கம் திரும்பியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட திருநாவுக்கரசு அந்த மருத்துவரின் அந்தரங்க உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை பெற்றுள்ளான். கடைசியில் தன் சுயரூபத்தை காட்ட தொடங்கிய திருநாவுக்கரசு தான் ஒரு ஆண் என்றும் நீ பொள்ளாச்சிக்கு வர வேண்டும் இல்லையென்றால் உனது அந்தரங்க உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை உனது கணவருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்து போன அந்த பெண் மருத்துவர் வேறுவழியின்றி திருநாவுக்கரசின் பொள்ளாச்சி பண்ணை வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு அவரை சீரழித்த திருநாவுக்கரசு வீடியோ எடுத்து வைத்து மிரட்டி சுமார் ஒன்றரை கோடி ருபாய் வரை கறந்துள்ளான்.