லெபனானில் விபத்தின் போது போஸ் கொடுத்த மணப்பெண் தலைதெறிக்க ஓடிய காட்சி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய பயங்கர வெடிவிபத்து. லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் (ஆகஸ்ட் 4) மாலை பயங்கரமான வெடி விபத்தில் சிக்கி 130 க்கும் அதிகமானோர் பரிதாபமாக உ யிரிழந்தனர். 5 ஆ யிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை சேதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் நாடு அண்மை காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவதாக நடந்த பெரு வெடிப்பில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதற்கு காரணம், பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகம் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்துவைக்கப்பட்டிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரேட் தானாம். அது வெடித்ததில் பெய்ரூட் நகரமே உருகுலைந்து போனது.

இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட பெய்ரூட் நகரில் மணப்பெண் ஒருவர் ஆடை அலங்காரங்களுடன் அழகான சூழலில் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபடி இருந்தபோது வெடி பொருள் வெடித்துள்ளது. சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தில் அந்த மணப்பெண் அங்கிருந்து தலைதெறிக்க ஓடுகிறார். மேலும் மிகவும் அழகாக இருந்த அந்த இடமே சில நொடிகளில் அலங்கோலமாக மாறுகிறது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.