லெபனானில் பயங்கர குண்டுவெடிப்பு.. உயரும் பலி எண்ணிக்கை.. விபத்திற்கு இதுதான் காரணமா! அதிர்ச்சி காட்சி!

உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய பயங்கர வெடிவிபத்து. லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் (ஆகஸ்ட் 4) மாலை சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை சேதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாடு அண்மை காலமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவதாக நடந்த பெரு வெடிப்பில் பெருத்த சேதம் ஏற்பட்டது.

இந்த கொடூர வெடிவிபத்தில் தற்போது வரை 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, பெய்ரூட் நகரையே உருகுலைய செய்திருக்கும் இந்த மோசமான வெடிவிபத்து எப்படி நடந்தது என அந்நாட்டின் பிரதமர் லெபனான் பிரதமர் ஹசன் டியப் விளக்கமளித்துள்ளார். வெடிவிபத்து நடந்த துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வேதிப்பொருள் எதிர்பாராத விதமாக வெடித்ததில் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை எனவும் லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!