தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கிவர, போனி கபூர் தயாரித்து வருகிறார். சென்ற வருடம் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது.
அஜித் இப்போது தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். கொரோன காலகட்டத்தில் படபிடிப்பு நிறுத்த பட்டிருந்தது. தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் போட்டு நடந்து வருகிறது. படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் வரும் நியூஇயருக்கு அதாவது நாளை புதிய அப்டேட் வருகிறது என்றனர்.
அதோடு அஜித்தின் பிறந்தநாள் அன்று படம் ரிலீஸ் என்றும் கூறப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது. தனது குடும்பத்துடன் அஜித் புகைப்படம் எடுத்திருப்பது போல் உள்ளது. அந்த புகைப்படம் மூலம் படத்தில் அஜித்தின் பெயர் அருண்குமார் என தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.
LATEST Pic Of #ThalAJITH From #Valimai 🔥 pic.twitter.com/lT7E8ukhLV
— Dheena Shankar (@Dheena_shankar) December 31, 2020