லாக்டவுனில் மிக ஒல்லியாக அழகாக மாறிய நடிகை அஞ்சலி!! புகைப்படங்கள் இதோ..

அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் நடிகை அஞ்சலி. இப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக திரையுலகில் அமைந்தது. அங்காடித் தெரு திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் ராம் இயக்கத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனை தொடர்ந்து தூங்க நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என வரிசையாக பல வெற்றிப் படங்களில் நடித்து வந்தார்.

 

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். தமிழ் திரைப்படமான இறைவியில் நடித்ததற்காக அவர் பெரும் கைதட்டல்களைப் பெற்றார். இயக்குனர் ராமின் தரமணியில் இவரின் கதாபாத்திரம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

மேலும் சமீபத்தில் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான பேரன்பு படத்தில் சில காட்சிகள் நடித்திருந்தார். தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்ட, டுவிட்டரில் அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்த நடிகை அஞ்சலின் தற்போது தான் மிகவும் ஸ்லிமாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.