லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த நடிகர் மணிவண்ணன் மகன்..! 7ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்ட புகைப்படம்..!

ஈழப்பெண்ணை மணந்த நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் தனது 7ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன். திரைப்பட நடிகரான இவர் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ரகுவண்ணனுக்கும் லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணான அபிக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தங்களது 7ஆம் ஆண்டு திருமண நாளை ரகுவண்ணன் – அபி தம்பதி கொண்டாடினார்கள்.

இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.