லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ்? மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா…

வனிதா இந்த பெயர் தான் இணைய உலகத்தின் ஹாட் டாபிக். வனிதா பீட்டர் பால் திருமணத்தை குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் கடுப்பான வனிதா, என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என விளாசினார். தன்னிடம் ஒன்னேகால் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் இரண்டரை கோடி ரூபாய் கேட்டு பிக் பாஸ் வனிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தனியார் யூடியூப் சேனலில் நடைபெற்ற விவாதத்தில், நடிகை வனிதா விஜயகுமார்-பீட்டர் பாலின் திருமணம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதில், வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தரக்குறைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்தநிலையில் தற்போது வனிதாவும் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே இருவரும் டிவிட்டரில் மாறி மாறி விளாசி வருகின்றனர். இந்நிலையில் பதிலுக்கு வனிதாவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு இடையிலான மோதலின் செகன்ட் இன்னிங்ஸ் நோட்டீஸ் மூலம் தொடங்கியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!