மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். மதுபாலா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கி அர்ஜுன் நடித்த ரோஜா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஜெண்டில்மேன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா, பிரபு, மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் சில வருடங்களில் ஆனந்த் ஷாவை திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதை தொடர்ந்து வாயை மூடி பேசுவோம் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் மதுபாலாவிற்கு அமேயா மற்றும் கீயா இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவர்களை தன் டுவிட்டர் பக்கத்தில் காட்டியுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல், இதோ அந்த போட்டோ…