ரெமோ படத்தில் நடித்த குட்டி பாப்பா யார் தெரியுமா? இந்த பிரபல சீரியலில் நடிக்கிறாராம்! வெளியான குடும்ப புகைப்படம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை செல்ல எவ்வளவோ நடிகர் நடிகைகள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி சின்னத்திரையில் வந்த வெள்ளித்திரையில் கலக்கியவர்கள் பலரும் இருக்கின்றனர், ஏன் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களில் சிவகார்த்திகேயன் அடுத்தகட்ட புகழுக்கே சென்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார். தனுஷுடன் காமெடி நடிகராக அறிமுகமானவர் பின்னர் மெரீனா திரைப்படம் மூலம் முழு நேர கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் நல்ல வரவேப்பை பெற்றது. தற்போது தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படத்தினை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் நடிகர் சிவகார்திகேயனுடன் ஒரு க்யூட்டான குழந்தை நடித்திருப்பார். அவர் தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார். நடிகர் ஷியாம் மகள் தான் ரெமோ படத்தில் நடித்த குழந்தை. அவரின் தற்போதைய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *