“ரெட்” பட ஹீரோயின் ‘ ப்ரியா கில் ‘ இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துடன் ஜோடியாக ரெட் படத்தில் நடித்தவர் நடிகை ப்ரியா கில். இப்படத்தை இயக்கியவர் காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம் புலி அவர்கள். ரெட் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் ப்ரியா கில். 1996 இல் “தேரி மேரா சப்னா” படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். ஹிந்தி தவிர்த்து மலையாளம், தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, போஜ்பூரி மொழிகளில் தலா ஒருபடம் நடித்தவர்.

பாலிவுட்டில் இருந்து வந்த நடிகை. 1995 இல் மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவதாக வந்தவர். கடைசியாக 2006 இல் இரண்டு ஹிந்தி படம் நடித்தார். அதன் பின் பெரிதாக நடிக்க வாய்ப்பு அமையவில்லை.ஷாருக்கான், சல்மான் கானுடன் நடித்தவர். இவர் அறிமுகமான அதே ஆண்டில் தான் ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் கூட அறிமுகமாகினர். சிரப் தும், ஜோஷ் மற்றும் ரெட் படங்கள் இவரின் வெற்றி படங்களாகும்.

எனினும் ப்ரியா கில் பெரிதாக சினிமாத்துறையில் ஜொலிக்கவில்லை. தற்போது 43 வயதாகும் பிரியா கில் சவுத் கரோலினா, டென்மார்க்கில் வசித்து வருகிறாராம். மாடெல்லிங் ஏஜென்சி ஒன்றை அங்கு நடத்துவதாக சொல்கின்றனர். எனினும் அதிகாரபூர்வ தகவல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published.