ரெடிமேட் பாக்கெட் மாவு வாங்கி இட்லி, தோசை செய்து சாப்பிடுபவரா நீங்கள்? தவறாம படிங்க !!! ஆபத்தா???

நாம் நீண்ட நாட்கள் வாழவேண்டுமெனில் நல்ல உணவு பழக்கம் மிகவும் அவசியமான ஒன்று. அதைப்பற்றின ஒரு தொகுப்பு தான் இது..அதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால், இட்லியில் நாம் எண்ணெய் சேர்ப்பதில்லை. அதோடு இந்த இட்லி நீராவி மூலமாக சமைக்கப்படுகிறது. அதுதான் இதிலிருக்கும் மிகப்பெரிய ஆரோக்கியமான விஷயம். இதனால் செரிமானக் கோளாறோ அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னையோ ஏற்படாது என்பதனால் தான் இட்லி மிகச் சிறந்த காலை உணவாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்று நேரமின்மை மற்றும் சோம்பேறித்தனம் போன்ற காரணத்தினால், நாம் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு நமது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கிறது என்பதை அறியாமலேயே நாம் அதை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றோம்.

இதற்கு முன்பாக, ஆட்டுக்கல்லில் தான் மாவு அரைத்து சாப்பிடும் பழக்கம் நமக்கு இருந்து வந்தது. கிரைண்டர் வந்தபின்பு, ஆட்டுக்கல் வீட்டில் காட்சிப் பொருளாக இருந்தது.  மாவு ஆட்டுகின்ற போது, அதன்பிறகு, கிரைண்டரைக் கழுவுகின்ற பொழுது, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படும். இது மாவாட்டுகின்ற பொழுது, இட்லி, தோசை மாவிற்குள் அடைக்கலம் ஆகிவிடும். இந்த ஈகோலி பாக்டீரியா தாக்கத்தினால் நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய உடல் நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

 

தினமும் இட்லி, தோசை தான் சாப்பிடுகிறோம்? பிறகு எப்படி நமக்கு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்று நீங்கள் நினைக்கலாம். இதற்கெல்லாம் காரணம் நீங்கள் வெளி கடைகளில் வாங்குகின்ற இட்லி மாவு தான். ஈகோலி என்னும் பாக்டீரியா நீங்கள் மாவை வேக வைத்தாலும் கூட, முழுமையாக அழிவதில்லை என்பதுதான் இதில் உள்ள சோகமான விஷயமே. எனவே பாக்கெட் களில் அடைத்து வைத்த ரெடிமேட் மாவினை தவிர்த்து விடுவது நல்லா விஷியமாகும்.

Leave a Reply

Your email address will not be published.