ரியோ மனைவி அளித்த பதில்! அப்படி செய்தது ஏன்? ஆவேசத்துடன் இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு..!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு பல சப்ரைஸ்களுடன் பிக்பாஸ், போட்டியாளர்களை மகிழ்வித்தார். அதில் முக்கியமானது போட்டியாளர்களின் வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பரிசுகளை அவர்களுக்கு கொடுத்தது என்று சொல்லலாம்.

இதற்கு காரணம் மூன்று மாதங்களாக வீட்டைப் பிரிந்து இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பெற்ற பரிசுகளை பார்த்து கண் கலங்கினர். அதிலும் முக்கியமாக ரியோ வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. ஆனால் சிலர் ஏன் இப்படி செய்தீர்கள் என்று அவரது மனைவியிடம் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும் பொழுது “இதை சொல்வதற்கே கொஞ்சம் அசௌகரியமாக தான் இருக்கிறது. ஆனாலும் சிலர் இதைப் பற்றி என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பதால் இதை சொல்கிறேன். ஆம் நான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் பரிசு அனுப்பினேன். இது கிறிஸ்துமஸ் நேரம் மக்களே! அதுவும் இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி! நான் ஏன் ஒரு சிலருக்கு மட்டும் பரிசுகளை அனுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.