ரியோ- நிஷா செய்த செயலால் ஷாக்கான போட்டியாளர்கள்..! வைரலாகும் அன்சீன் காட்சி

பிரபல தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி. தற்போது நிகழ்ச்சி தொடங்கி 4 நாட்களே ஆனா நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே ஒரே சண்டையாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷாவின் ராம்ப் வாக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிவியில் ஒளிபரப்பான காட்சிகள் ஹாட்ஸ்டார் இல் அன்சீன் வீடியோ என்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை அண்மையில் விஜய் தொலைக்காட்சி துவங்கிய விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பெரும்பாலும் டிவியில் ஒளிபரப்பப்படும் காட்சிகளை விட இந்த அன்சீன் வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நேற்றைய எபிசோடில் உள்ள சில சுவாரஷ்யமான நிகழ்வுகள் இணைத்தில் வெளியாகியுள்ளது.

அதில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி போல போட்டியாளர்களில் ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அதிலும் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷாவின் ராம்ப் வாக் அனைவரையும் சிரிக்க வைத்தது. இருவரும் நடந்து முடித்த பின்னர் ரியோவை நிஷா முத்தமிட்டு இருந்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *