பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது 86 நாட்களை கடந்து இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக இந்த சீசன் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை எனவே ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வார வாரம் போட்டியாளர்கள் வெளியேற இறுதியில் இந்த முறை யார் பிக்பாஸ் படத்தை வெல்ல போகிறார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் தற்போது பிக்பாஸில் ரசிகர்களிடம் பிரபலமான பிரீஸ் டாஸ்க் நேற்று முதல் நடந்து வருகிறது.

நேற்று ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் அண்ணன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதுவரை போட்டியாளர்களின் குடும்பம்ங்கள் உள்ளே நுழைந்து சரமாரியான கேள்விகளை கேட்டு வருகின்றனர். நேற்று ஷிவானியின் அம்மா அவரை திட்டி சென்றார். பின்னர் பாலாவின் அண்ணன் வீட்டை கலகலப்பாக மாற்றி சென்றார்.
இதனிடையே அடுத்து வெளியான ப்ரோமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி நுழைகிறார். அதைக்கண்ட ரியோ கட்டியணைத்து கண்ணீர் வடிக்க, அதன் பின்னர் ஸ்ருதி ஒரு டாஸ்கில் எதுக்கு ரம்யா பாண்டியனை அலோக்க தூக்கின என நகைச்சுவையாக கேட்கிறார். அதற்கு ரியோவும் அது நண்பர்கள் டாஸ்க் என கூறுகிறார். எப்படி இந்த வாரம் freeze டாஸ்காகவே சென்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.