ராதிகாவின் சீரியலில் நடித்திருக்கிறாரா பிக் பாஸ் சம்யுக்தா? வெளியான தகவல் இதோ..

சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்த நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த 4 ஆம் தேதி மலை 6 மணியளவில் பிக் பாஸ் சீசன் 4 துவங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில், ரியோ, ரேகா, அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.

அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர். இவர் மாடலிங், மற்றும் நடனத்திம் மீது ஈர்ப்பு கொண்டவர். இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். மேலும், இவர் ஒரு இன்டர்நேஷனல் சலூன் பிரான்சீஸ் சென்னையில் நடத்தி வருகிறார். மேலும், இவர் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் தோழி என்பது பலரும் அறிந்திராத ஒன்று. அவருடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

இந்நிலையில், சம்யுக்தா முதலில் ராதிகா சரத்குமாரின் ”சந்திரகுமாரி” சீரியலில் நடித்துள்ளார். அதில், அவரை ராஜகுமாரி ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அதன் பின் வெள்ளித்திரையில் ஓலு என்ற மலையாள படம் மூலமாக அறிமுகம் ஆனார். தற்போது பிக்பாஸ் வந்திருக்கும் இவர் கஷ்டங்களை கடந்து இறுதி வரை பயணிப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!