தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் ராதிகா நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனரான பாரதிராஜா அவர்களால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ராதிகா சரத்குமார். சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு.

இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் தாயாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் முக்கியப் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் மிகவும் வெற்றிகரமாக சன் தொலைகாட்சியில் ஒளபரப்பாகி ஓடி கொண்டிருக்கும் சித்தி 2 தொடரிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். நடிகை ராதிகாவின் மகள் தான் ரேயான்.
இவர் அபிமன்யூ மிதுன் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை மற்றும் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் தனது பேரன் மற்றும் பெதியுடன் ராதிகா மற்றும் தனது குழந்தைகளுடன் ரேயான் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதோ…