ராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

2020 ஆம் ஆண்டு, ராகு பகவான் ஆடம்பரம் மற்றும் லட்சியங்களின் ஆட்சியாளரான ரிஷபத்திற்கு இன்று நகர்ந்துள்ளார். இந்த ராசியில் ராகு பகவான் ஏப்ரல் 2021 வரை நிலையாக இருப்பார்.

இந்த பெயர்ச்சி சிலருக்கு சாதாகமான காலமாகவும், சிலருக்கு சவால் நிறைந்ததாகவும், ரோலர் கோஸ்டரில் பயணம் மேற்கொள்வது போன்றும் இருக்கும். ஆனால் ராகுவின் இந்த பெயர்ச்சியால்

கடகம், தனுசு, மீனம், சிம்மம் போன்ற ராசிக்காரர்கள் பெரும் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகிறார்கள். இப்போது அந்த மூன்று ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட நன்மைகளை ராகு பகவான் வழங்கப் போகிறார் என்பதையும் பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, வரக்கூடிய மாதங்கள் மன அமைதி மற்றும் தெளிவு நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழப் போகிறார்கள். சுமூகமான நல்லுறவு மற்றும் நெருக்கமான ஆதரவு போன்றவை உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும்.

முக்கியமாக நீண்ட காலமாக நீங்கள் உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தவராயின், தற்போது அந்நிலை மாறி உங்கள் உடல்நலம் மேம்பட ஆரம்பிக்கும். இருப்பினும், உங்கள் உடல் ஆரோக்கியத்தை அடிக்கடி சரிசெய்து கொள்ளுங்கள். அதற்காக ஆரோக்கிய விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஏனெனில் உங்களின் சிறு தவறுகள் கூட உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்க வாய்ப்புள்ளது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்.

தனுசு

தனுசு ராசியைச் சேர்ந்தவர்களுக்கு, இந்த பெயர்ச்சி சாதகமான முடிவுகளைத் தரக்கூடியதாக இருக்கும். கடந்த சில மாதங்களாக சுய சந்தேகங்கள், அவநம்பிக்கை மற்றும் குழப்பங்களால் சிக்கித் தவித்திருந்தால், இந்த பெயர்ச்சியால் அதிலிருந்து விடுபடுவீர்கள்.

அதோடு இந்த பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மைகளை வழங்கி, வாழ்வில் மாற்றத்தை உண்டாக்க ஆரம்பிக்கும். மேலும் இப்பெயர்ச்சி காலம் பலருக்கு சுய பாதுகாப்பு மற்றும் மன ஆரோக்கியத்திற்காக நேரத்தை ஒதுக்குகிறது.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வழியில் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். மொத்தத்தில், இந்த பெயர்ச்சி நீங்கள் புரிந்து கொள்ள ஏராளமான வாய்ப்புக்கள் நிறைந்ததாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு, ராகு பகவான் ஒரு நேர்மறை மற்றும் நல்ல துவக்கங்களைக் கொண்டு வரப் போகிறார். உங்கள் தைரியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும்.

தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதோடு, நல்ல லாபத்தையும் வழங்கும். மேலும் இந்த பெயர்ச்சி நீங்கள் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருக்கும் மன தெளிவு மற்றும் முன்னேற்றத்தை வழங்கும். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையில் ஒரு நல்ல சமநிலையை பராமரிப்பீர்கள்.

மீன ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. உடற்பயிற்சி செய்ய தேவையான நேரத்தை எடுத்துக் கொள்வதன் மூலமும், வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க மறவாதீர்கள். இச்செயலால் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப் போகிறது. இதுவரை தொழில் அல்லது வியாபாரத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கிவிடும்.

தொழில் தொடங்க விரும்பினால், அதற்கான உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களின் தாயார் இதுவரை உடல்நலக் குறைவால் கஷ்டப்பட்டு வந்திருந்தால், இந்த பெயர்ச்சியால் பிரச்சனை நீங்கிவிடும்.

இதுவரை சந்தித்த மருத்துவ செலவுகள் குறையும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புள்ளது. ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். முக்கியமாக இதுவரை இருந்த மனக்கசப்பு, நிம்மதியின்மை போன்றவை நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *