ரம்யா பாண்டியன் பிக்பாஸ்-4ல் பங்கேற்கிறாரா? ஆர்மி ஆரம்பிக்க இப்போவே அலைமோதும் ரசிகர்கள்…

குக் வித் கோமாளி என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரம்யா பாண்டியன். தற்பொழுது கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார் இவர். ஜோக்கர் படத்தின் வாயிலாக நல்ல ரீச் பெற்றவர் ரம்யா பாண்டியன். சினிமாவில் இவர் நடிப்பிற்காக கிடைத்ததை விட, இடுப்பு மடிப்பிற்காக கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்றால் அது மிகையாகாது. இன்றும் சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் போட்டோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் போட பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களுடன் கேள்வி பதில் செக்ஷனில் கலந்துகொண்டார். ரசிகர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக செல்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டார். அதற்கு “தெரியவில்லை பிக்பாஸ் நிகழ்ச்சி தரப்பிலிருந்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. தொடர்பு கொள்ளும் பட்சத்தில் தான் நான் பதில் சொல்ல முடியும்.” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர். எனவே இம்முறை சேனல் தரப்பு அழைக்கும் பட்சத்தில் கட்டாயமாக பங்கேற்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த சீசனில் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் ஆர்மி அமைத்து சிறப்பாக கொண்டாடி விடுவார்கள் என இப்போது கணக்குப் போட்டு விட்டார்கள் நம்ம கோலிவுட் வாசிகள்.

Leave a Reply

Your email address will not be published.