சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவருக்கு உலகம் முழுதுமே பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக கடந்த 40 வருடங்களாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆம் வசூலிலும் பல பல சாதனைகளை கடந்த பல ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸில் செய்து வந்து கொண்டே இருக்கிறார் ரஜினி. சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்த ரஜினி இவருடன் ஒரு கமர்சியல் படம் கண்டிப்பாக பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் “அண்ணாத்த”.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணத்தினால் படப்பிடிப்பு மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை குறித்து பல விதமான சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நாம் செம்ம மாசாக மிகவும் ஸ்டைலான ஹீரோவாக நாம் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் தற்போது தனது பண்ணை வீட்டில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ரஜினியை பார்த்து இருக்கிறோமா. இதோ தனது பண்ணை வீட்டில் அதிக காலை ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று தற்போது ரசிகர் ஒருவரால் சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது.
சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இன்று மாலை தலைவர் வாக்கிங் @rajinikanth @rmmoffice @SudhakarVM @RIAZtheboss pic.twitter.com/lmnFHkcQmA
— GINGEE RAJINI SENTHIL (@GingeeRajini) July 21, 2020