ரஜினி – கமல் நடிக்கவிருந்த மாஸ்டர் பட இயக்குனரின் படத்தில் புதிய திருப்பம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..

தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கடந்த வருடம் இவர் இயக்கி தீபாவளிக்கு வெளியான படம் தான் கைதி. மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ், முழுமையாக தாக்கம் குறைந்ததும், குறிப்பாக 2021ஆம் ஆண்டின் பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல் ஹாஸன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் இயக்க போகிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியாகியது. இந்நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் கமல் முதலில் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இரண்டு படங்களை இயக்க இருக்கிறார் என்றும் தற்போது தீடீர் திருப்பமாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதனை குறித்து தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். அதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.