தமிழகத்தில் ரஜினியின் அரசியல் முடிவால் சோகத்தில் இருந்த ரஜினி ரசிகர் உ யி ரி ழ ந்த சம்பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் கடைசியில் கட்சி குறித்தும், அரசியல் குறித்தும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் இருந்து பின்வாங்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு ஒரு சிலருக்கு அ திர் ச்சியாகவும், குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
சமீபத்தில் அண்ணாத்த படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் ரஜினியும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இக்காரணங்களால் அரசியலில் இருந்து பின் வாங்கினார் ரஜினி.
விழுப்புரத்தின் பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சிறு வயது முதலே ரஜினியின் ரசிகராக இருந்து வருகிறார். அத்துடன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தில் அயராது பாடுபட்டும் வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய உடல்நிலையின் காரணமாக அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவித்தார். இதனால் கடும் சோகத்தில், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித்திரிந்த ராஜ்குமார் அ திர் ச்சியில் ம ர ண மடைந்து விட்டார். இவருக்கு இரண்டு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.