பாலிவுட்டை சேர்ந்த நடிகர்களின் ரசிகர்கள் ஏன் நடிகர்களும் நம் தமிழ் சினிமா நடிகர்களை கிண்டல் செய்வார்கள்.
அப்படி, பிரபல பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனாவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று நகைச்சுவையாக ஒரு டுவிட்டை பதிவு செய்தார்.
இந்த டுவிட் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த டுவீட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ரோஹித் ராயை விமர்சனம் செய்து ஆயிரக்கணக்கான கமெண்ட்டுக்கள் பதிவாகின. இதனை அடுத்து இந்த டுவிட்டை தான் யாரையும் புண்படுத்துவதற்காக பதிவு செய்யவில்லை என்றும் வழக்கமாக ரஜினியை வைத்து பதிவு செய்யப்படும் ஜோக்குகள் போல் நகைச்சுவைக்காக தான் பதிவு செய்தேன் என்றும் ரோஹித் ராய் விளக்கமளித்தார். மேலும் தனது டுவிட் ரஜினி ரசிகர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் அமைதி ஆனார்கள்.
