ரகசியமாக தயாராகும் பிக்பாஸ் சீசன் 4 ! முக்கிய பிரபலம் போட்ட கண்டிசன் என்ன தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 க்கான நேரமும் வந்துவிட்டது. இவ்வருடம் நிகழ்ச்சி நடைபெறுமா என்ற சந்தேகமான கேள்வியே ரசிகர்கள் மனதில் இருக்கிறது. வருடத்தில் பாதியை கடந்துவிட்டோம் டிவி நிகழ்ச்சிகளில் பலரின் கவனங்களை ஈர்த்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீதான பார்வையும், எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொங்கியுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு நிலவி வருவதால் சின்னத்திரைக்கான படப்பிடிப்புகள் நடத்துவதில் சிரமமான சூழ்நிலையே நிலவுகிறது.

தமிழ் பிக் பாஸ் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல் ஹசன் ஆவார்.தமிழ் பிக்பாஸ் போல தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 4 ஐ இவ்வாண்டு ஒளிப்பரப்பாகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் கடந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் நாகார்ஜூனா கொரோனா முடியும் வரை படம் அல்லது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என கூறிவிட்டாராம்.

இந்நிலையில் நிகழ்ச்சி உருவாக்கக்குழு போட்டியாளார்களை ஜூம் ஆப் மூலம் மீட்டிங் நடத்தி, வீடியோ மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாம். கொரோனா குறைந்த பின் நிகழ்ச்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளனர். மேலும் 6 அல்லது 7 வாரங்களில் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் கொரோனா நீடித்தால் இந்நிகழ்ச்சி இவ்வருடம் ரத்தாகவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.