யூடியூப் நிறுவனம் அனுப்பிய மெயில்… வனிதாவின் பதில் என்ன தெரியுமா?

வனிதா இந்த பெயர் தான் இன்று இணைய உலகத்தின் ஹாட் டாபிக். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவரின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது, பிறகு வனிதா செம்ம பேமஸ் ஆனார். வனிதா பீட்டர் பால் விவாகரத்து செய்வதற்கு முன் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. பலரும் இருக்குற கொரோனா பிரச்சினையால் இதெல்லாம் தேவையா? என கொந்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வனிதா, யாருங்க நீங்க? என்று கேட்டு யூடியூப் தனக்கு மெயில் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். யூடியூபில் எங்கே பார்த்தாலும் என்னுடைய முகம் தான் தெரிகிறது, இதனால் யூடியூபில் நிறுவனமே குழம்பிப்போய் உள்ளதாக வனிதா கூறியுள்ளார்.

மேலும், என்னை பற்றிய தகவல்கள் அதிகம் வருவதால் நீங்கள் யார் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், என யூடியூப் தனக்கு அனுப்பியுள்ள மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக வனிதா கூறியுள்ளார். இதனை பார்த்து நான் பெருமைப்படுவதா, சிரிப்பதா, கோபப்படுவதா என்று கூட தெரியவில்லை என வனிதா கூறியுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல விமர்சனத்தை அள்ளி வீசத்தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!