பூர்ணா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூர்ணாவை தொடர்பு கொண்டு துபாய் தொழிலதிபர் குடும்பத்தினர் என்று ஒரு கும்பல் பெண் கேட்டு வந்துள்ளனர். அதன்பின் அந்த கும்பல் போலியானவர்கள், மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நடிகை பூர்ணா தரப்பு புகாரின் பெயரில் போலீஸ் அந்த கும்பலை விசாரித்து கைது செய்துள்ளது. இது குறித்து பேட்டியளித்த நடிகை பூர்ணா, எனக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து தான் எந்த துபாய் தொழிலதிபர் கும்பல் என்னை பெண் கேட்டு வந்தனர். அவர்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தோம்.
இந்த நிலையில் தான் அந்த கும்பல் போலியென தெரியவந்தது, அன்பாக பேசி எங்களை ஏமாற்றி உள்ளார்கள். இதனால் திருமணம் என்றாலே பயமாக உள்ளது, யாரை நம்புவது என்றே தெரியவில்லை. இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என முடிவு செய்துள்ளேன், இந்த அதிர்ச்சியிலிருந்து மீள தற்போது நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறேன்” என பேட்டியளித்துள்ளார்.