சினிமா துறை பிரபலங்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என அனைவர்க்கும் தெரியும். பொது இடங்களில் பார்ப்பது அரிது, அப்படி வெளியில் வந்தாலும் அதிக பாதுகாப்புடன் வருவார்கள்.
ஆனால் தெலுங்கு நடிகர் ஒருவர் சாதாரணமாக பிளாட்பாரத்தில் அமர்ந்து உணவு உண்ட போட்டோ மற்றும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் நாராயண மூர்த்தி தான் அது.
சினிமாவில் படு பயங்கரமான ரோல்களில் நடித்துள்ள அவர் ரயில்வே பிளாட்பார்மில் அமர்ந்துகொண்டு ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் எளிமையை பற்றி ஆச்சர்யத்துடன் பேசி வருகின்றனர்.