மௌனராகம் சீசன் 2 சீரியல் ப்ரோமோ மில்லியன் கணக்கான பார்வைகளை அள்ளியது!! புரமோ இதோ

சமீபகாலமாக சீரியல் மோகம் அனைவரிடமும் அதிகரித்து வருகின்றது. சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் அப்பா மற்றும் மகள் பாசத்தை கதைக்களமாக கொண்டு குடும்ப தொடராக எடுக்கப்பட்ட சீரியல் மௌன ராகம். இத்தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று.

கடந்த 2017 ல் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் கடந்த செப்டம்பர் 19 ம் தேதியோடு நிறைவு பெற்றது. குழந்தை கிருத்திகாவின் கேரக்டரை வைத்து இந்த கதை நகர்ந்தது. ஷமிதா, ராஜிவ் பரமேஷ், சிப்பி, சீமா என பலர் இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தற்போது இந்த சீரியலில் அடுத்த பாகம் சீசன் 2 விரைவில் வரப்போகிறதாம். இதுகுறித்த புரமோ வெளியாகியுள்ளது.

இரண்டே நாட்களில் 1.2 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. இரண்டாம் சீசனின் சக்தி எப்படி இருப்பார் என எதிர்பார்ப்பு இருக்கும் தானே. இதோ புரமோ வந்துவிட்டது. இதில் சக்தி கேரக்டரில் நடிப்பது நடிகை ரவீனா தான். இவரை எங்கோ பார்த்திருப்பது போல தோன்றலாமல்லவா. ஆம் இவர் ராட்சன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.