மொத்த செலவையும் ஏற்ற ரஜினிகாந்த்! எனது 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது என நடிகர் பொன்னம்பலம் உருக்கம் …

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகரான பொன்னம்பலம் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நடிகர் பொன்னம்பலத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவி செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது நடிகர் கமல்ஹாசனே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று நடிகர் பொன்னம்பலத்தை அழைத்து வந்தார். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் திடீர் உடர் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார். அதுமட்டுமன்றி, பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் அவர் ஏற்றுள்ளார். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்கான மொத்த செலவையும் நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுள்ளார்.

இத்தகவலை நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது 2 சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன் மற்றும் மகளின் படிப்புச் செலவை நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனது சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என உருக்கமாக கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.