மொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை: முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு பகீர் வாக்குமூலம்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக கைதாகியுள்ள 4 பேரில் ஒருவரான திருநாவுக்கரசு அளித்துள்ள வாக்குமூலம் பொலிஸ் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. தமிழகத்தின் பொள்ளாச்சியில் 400-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி நாசமாக்கியது தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலம் விசாரணை அதிகாரிகளையே அதிர வைத்துள்ளது. தமது தந்தை வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வருவதால், பணத்திற்கு எப்போதும் குறை இருந்ததில்லை என கூறும் நிருநாவுக்கரசு.

அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜ், உள்பட 20 பேர் கொண்ட பெரிய கேங் தங்களது எனவும், அதில எல்லாருமே அதிமுகக்காரங்கதான். ஒன்னா தண்ணி அடிப்போம், எல்லா கெட்ட பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் செஞ்சோம் என தெரிவித்துள்ளார். மேலும், பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி நிறைய பெண்களிடம் நட்பை உருவாக்க முடிந்தது. நிறைய பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதிச்சோம். வட்டிக்கு பணம் தரும் தொழிலை விடஇதில் எங்களுக்கு பணம் கொட்டியது.

எங்க குழுவில் எல்லாருமே இந்த தொழிலைதான் செஞ்சோம். எங்களை மாதிரியே இதே மாதிரி தொழிலை செய்தவர்தான் சிவில் இன்ஜினியர் சபரிராஜன். இந்த விடயம் எங்களுக்கு லேட்டாதான் தெரிஞ்சது. அதனால அவரை எங்கள் காரில் கடத்திச் சென்று அடித்து உதைத்தோம். அவரிடம் இருந்து செல்போன்களை பிடுங்கி பார்த்தோம். ஷாக் ஆயிட்டோம். நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை ஏமாத்தி இருக்கோம். ஆனால் சபரிராஜனோ, தனியாகவே 60 பெண்களை ஏமாத்தி இருந்திருக்கிறார். அதனால அந்த வீடியோ எல்லாத்தையும் எங்க செல்போன்லயும் பதிவு பண்ணிக்கிட்டோம். அதில இருக்கிற பெண்களை குறி வைத்தோம். அந்த பொண்ணுங்க கிட்ட சபரிராஜனை பேச சொல்ல, அவரும் அந்த பெண்களிடம் பேசி எங்கள் பண்ணை வீட்டுக்கு வரவழைத்துவிடுவார். அங்கு இந்த வீடியோவை அந்த பெண்களிடம் காட்டி மிரட்டி உல்லாசமாக இருப்போம்.

எங்கள் கும்பலில் உள்ள ஒருத்தனின் தங்கையை சபரிராஜன் காதலித்து வந்தான். ஆனா அந்த பெண்ணையும் நண்பனுக்கு தெரியாமல் பண்ணை வீட்டுக்கு சபரி மூலமாகவே நாங்கள் வரவழைத்தோம். கடைசியில், அந்த பெண் வீட்டில் போய் நண்பனிடம் எங்களை காட்டி கொடுத்துவிட்டாள்.

அதனால ஆத்திரமான அந்த நண்பன், சொந்தக்காரங்களை கூட்டி வந்து எங்களை கடுமையாக அடித்தார்கள். எல்லோரும் சேர்ந்து செல்போனை பிடுங்கி கொண்டனர். பொலிசில் கொண்டு போய் தந்துவிட்டனர். இப்படித்தான் நாங்க மாட்டிக்கிட்டோம் என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!