மொட்டை மாடி சுவற்றில் ஏற முயன்ற குழந்தையை தடுக்கும் பூனை.. என்னா பாசம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

செல்லப் பிராணிகளை வளர்ப்பதை இன்று பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அவை தங்கள் எஜமானர்களின் ஆபத்து காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்களை அதில் இருந்து மீட்பதையும் நாம் பார்த்து வருகிறோம். இங்கேயும் அப்படித்தான் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. குழந்தை ஒன்று வீட்டின் மொட்டை மாடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தை திடீரென மொட்டை மாடியில் இருக்கும் கைப்பிடிச்சுவரை பிடித்து ஏற முயற்சித்தது. இதைப் பார்த்த பூனை எங்கே குழந்தை சுவற்றின் மேலே ஏறி கீழே விழுந்துவிடுமோ என பதட்டத்தில் தன் காலால் குழந்தையின் கையை எடுத்துவிடுகின்றது. குழந்தையோ மீண்டும், மீண்டும் அப்படி முயற்சித்துக் கொண்டே இருக்க காலால் கையை எடுத்துவிட்டுக் கொண்டே இருந்தது பூனை. இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *