விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர், சினிமாவில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நந்தினி.
நடிகை நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். கடந்த சில மாதங்களாக நடிகை மைனா கர்ப்பமாக இருந்தனர். சமீபத்தில் தான் இவருக்கு மிகவும் எளிமையாக சீமந்தம் கூட நடந்து முடிந்தது. மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி ஷூட்டிங்கில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இது சீரியலா, ஏதேனும் ஷோவில் நடுவராக வருகிறாரா என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
Ready Camara rooooooolllllllllliiinnngggggg sir action Shoot mode start ???❤️