மைனா நந்தினியின் தம்பி யார் தெரியுமா? அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இந்த பிரபல சீரியலில் தான் நடிக்கிறாரா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் சினிமாவில் வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நந்தினி.

 

நடிகை நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி நாடங்கங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய்யில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று அன்புடன் குஷி. சின்னத்தம்பி சீரியல் புகழ் பிரஜன் தான் இதில் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் முதலில் கன்னட சினிமா நடிகை மான்ஷி ஜோஷி ஜோடியாக நடித்தார், ஆனால் லாக் டவுன் பிறகு வேறொரு நடிகை மாறிவிட்டார். பிரஜன் மற்றும் சிலரை தாண்டி புதுமுகங்கள் தான் அதிகம் நடிக்கிறார்கள். சீரியலில் பிரஜனின் நண்பனாக மைக்கேல் என்ற கதாபாத்திரத்திவ் நடிப்பவர் பிரபல சீரியல் நடிகையின் தம்பியாம்.அவர் வேறுயாரும் இல்லை மைனா நந்தினியின் சொந்த தம்பிதானாம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *