‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நடித்த பீம்பாய் என்ன ஆனார் தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் போட்டோ..

தமிழ் சினிமாவில் சில படங்கள் தான் மக்களிடம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. அப்படி பட்ட படங்களில் ஒன்று தான் “மைக்கேல் மதன காமராஜன்”. பல ஜாம்பவான்கள் நடித்து கலக்கி இருந்த இந்த படம் பல காலத்திற்கு புகழ் பெற்ற படமாக இருந்து வருகின்றது. இந்த படத்தில் நடித்து இருந்த பலர் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தார்கள். அப்படி இந்த படத்தின் மூலமாக பல மக்கள் மத்தியில் தெரிந்த ஒருவராக மாறியவர் தான் பீம் பாய்.

பஞ்சாபில் பிறந்த இவரின் உண்மையான பெயர் பிரவீன் குமார் ஆகும். இவர் இதற்க்கு முன்பே ஹிந்தியில் வெளியாகி பல மக்களை கவனம் ஈர்த்து இருந்த ‘மகாபாரதம்’ என்ற தொடரில் பீமனாக நடித்து உள்ளார். அவர் முதலில் ஹிந்தி சினிமாவில் 50 படங்களுக்கு மேலாக நடித்து வந்த இவர் பிரபலமாக பேசப்பட்ட காரணத்தால் அடுத்து தமிழ் சினிமாவில் கமல் நடிக்க வைத்து இருந்தார்.

இதனை எல்லாம் தாண்டி சினிமாவினை விட்டு சீரியலில் கூட நடித்து வந்தார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சினிமாவில் ஒரு நல்ல பிரபலம் கிடைத்த உடன் அரசியல் பக்கம் சென்றவர் இன்னுமே சினிமா பக்கம் திரும்பவில்லை…