தனது காந்த குரலினால் உலக மக்களைக் கட்டிப்போட்டு வைத்த பாடகர் எஸ்பிபி கடந்த 25ம் திகதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது குரல்கள் சமூகவலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான அவரது பாடல்களை பகிர்ந்து சோகத்தை பகிர்ந்து வருகின்றனர். மேலும் எஸ்பிபி மக்கள் சொத்து என்றும் நினைவு இல்லம் கட்டவும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

பாடலில் மட்டுமல்ல மனிதாபிமானத்திலும் எஸ்பிபி எப்போதும் ஸ்பெஷல் தான் ன்பதை இஎந்நிகழ்வு காட்டுகின்றது என்றும் அவரது பெயர் மட்டுமின்றி அவரது மனமும் பால் போன்று வெண்மையாகவும், தூய்மையாகவும் இருந்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் குறித்தும் அவருடன் பயணித்த நாட்களை குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி பாடகி சித்ராவை மேடையில் நடனமாட வைத்த காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதில், வெட்கத்தில் பாடகி சித்ராவின் முகம் சிவந்தே போய்விடும். அந்த அளவு குறும்பையும் எஸ்பிபி வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் மகனும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
Moments like this will never come back ?❤️ #SPB #Chitra #SPBalasubramaniam