மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா எப்படி உள்ளார் பாருங்க..! புகைப்படம் இதோ..

சினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் சித்ராவை கூறலாம். தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரையே கலக்கி கொண்டிருப்பவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.

 

இவருக்கும் கதிர் என்ற வேடத்தில் நடிப்பவருக்கும் உள்ள காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனாலேயே அவர்கள் இடம்பெறும் காட்சிகள் அதிகம் வருகின்றன. ரசிகர்கள் முல்லை கதாபாத்திரத்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படி சித்ராவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி வருகிறார். பொதுவாகா மற்ற நடிகைகளைக் காட்டிலும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் சித்ராவின் சோஷியல் மீடியா பதிவுகளுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவியும்.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை சித்ரா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் அவர் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *