சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர். விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை கலைஞராக பணியாற்றியுள்ளார். கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். வெள்ளித்திரையில் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் தனது திறமையால் ரௌத்திரம், இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி 2, வேலைக்காரன் போன்ற பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா விஜய்யின் பிகில் திரைப்படத்தில் பாண்டியமா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தார். தற்போது ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு திருமண கோலத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். ஆனால், இந்த புகைப்படத்தில் ஹாலிவுட் நடிகையை போல படு மாடர்னாக உள்ளார். மேக்கப்பில் அடையாளம் தெரியாத அளவு இந்திரஜா மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.