மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்கள், சினிமாவில் நடித்த சிந்து எப்படி உயிரிழந்தார்..?? மிகவும் இளம் வயதில் இப்படியொரு மரணமா..!!! பலருக்கும் தெரியாத தகவல்

80 களில் நடித்த ஒரு சில நடிகைகளை நாம் மறக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் நடிப்பு, அல்லது மிகவும் பரிட்சியமான முகம் போன்றவையாக இருக்கலாம்.. இணைந்த கைகள், பரம்பரை, பிஸ்தா, சூர்ய வம்சம் உள்ளிட்ட பல திரைப் படங்களிலும், ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களிலும் கோகுலம் வீடு, மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளவர் சிந்து. இவர் நடிகை மஞ்சுளாவின் சகோதரி சியாமளாவின் மகளாவார். இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி நிதிக்காக சின்னத்திரை நடிக, நடிகையர் வீதி வீதியாகச் சென்று நிதி வசூல் செய்தனர். அப்போது சிந்துவும் இதில் கலந்து கொண்டு நிதி சேகரித்தார். நீண்ட தூரம் நடந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இறந்தார்.

சிந்துவுக்கு வயது 33. கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவர் தான் சிந்துவின் முதல் கணவர் ஆவார். அவர் மூலம் சிந்துவுக்கு 9 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அவரை விவாகரத்து செய்த சிந்து  டிவி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *